டர்பன் அணி வெற்றி: தென் ஆப்ரிக்க ‘டி–20’ போட்டியில் | ஜனவரி 16, 2023
டர்பன்: தென் ஆப்ரிக்க ‘டி–20’ லீக் போட்டியில் அசத்திய டர்பன் அணி 27 ரன் வித்தியாசத்தில் பார்ல் அணியை வீழ்த்தியது.
தென் ஆப்ரிக்காவில், ஐ.பி.எல்., பாணியிலான ‘டி–20’ லீக் கிரிக்கெட் முதல் சீசன் நடக்கிறது. டர்பனில் நடந்த லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த டர்பன் அணிக்கு கைல் மேயர்ஸ் (39), வியான் முல்டர் (42) நல்ல துவக்கம் தந்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் குயின்டன் டி காக் (57), ஹெய்ன்ரிச் கிளாசன் (50*) அரைசதம் விளாசினர். டர்பன் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 216 ரன் குவித்தது. பார்ல் அணி சார்பில் லுங்கிடி, ஈவன் ஜோன்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை விரட்டிய பார்ல் அணிக்கு ஜேசன் ராய் (33) நல்ல துவக்கம் தந்தார். பட்லர் (2), கேப்டன் டேவிட் மில்லர் (1) ஏமாற்றினர். இயான் மார்கன் (64), டேன் விலாஸ் (44) கைகொடுத்தனர். பார்ல் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 189 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. டர்பன் அணி சார்பில் ரீஸ் டாப்லே 3, டுவைன் பிரிட்டோரியஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.
இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன் டர்பன் அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. பார்ல் அணி 5 புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, 2 தோல்வி) 4வது இடத்தில் உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
